Monday, November 26, 2012

தோல்வி

தோல்வி ஒரு தோழன்போல;
வாழ்வின் வழிமுழுதும் 
வெற்றியின் வழி சொல்லும்!

அதன்வலி ஒரு தந்தை சொல்போல;
நாம் செய்ததையும், செய்ய வேண்டியதையும்
செவ்வனே சொல்லித்தரும்!

சொல்லிக்கொண்டு வரவில்லை என்றாலும்
தோல்வி;
நிறையவே நிகழ்வுகள்
சொல்லித்தந்து சென்றது...

இப்போது யோசிக்கிறேன்
எத்தனை முறை
நான் தோல்வியை தழுவியிருபேன்?
எத்தனை முறை
தோல்வி என்னை தழுவியிருக்குமென்று?

Friday, December 31, 2010

புது வருடம்


புது வருடம்; புது வெள்ளம் போல
வழி ஒன்றுதான்; போகும் வேகம் அதிகம்
சேருமிடம் ஒன்றுதான்; செல்லும் ஓசை அதிகம்
இலக்கு ஒன்றுதான்; அடையும் நேரம் குறையும்!
வருமாண்டு வளம்பெற வாழ்த்துக்கள்!
- ஒளிச்சுடர்

Wednesday, November 3, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்



அகத்தீமை அகற்றி,
புத்தாடை போர்த்தி,
உள்ளும் புறமும்,
அன்பெனும் ஒளியேற்றும்
தீபத்திருநாள்!

- ஒளிச்சுடர்

Wednesday, December 30, 2009

புத்தாண்டின் அடைமொழி


வெப்பம் தவிர்;
நுகர்தல் குறை;
ஆற்றல் சேமி;
புவி அதன்
இயற்கை இருக்கசெய்!
- வரும் ஆண்டின் அடைமொழி!

Saturday, December 19, 2009

மகள் பிறந்த செய்தி!



இல்வாழ்வில் ஒரு இனிய செய்தி!
இனிக்கும் கனிபோல்
இன்பம் சேர்த்த செய்தி!
நிலவின் ஒளியாய்;
வாழ்வின் தோழியாய்;
வந்த செய்தி!
மகள் பிறந்தாள் என்ற நற்செய்தி!

இருமுறை தவறவிட்ட செல்வம் இது!
இம்முறை தேடிவந்த மகிழ்ச்சி இது!
என் வண்ணமயில்
பெற்றெடுத்த பதுமை இவள்!
ராமர் நட்சத்திரத்தில் பிறந்த சீதை இவள்!

மருத்துவச்சி தன்கரம் கொண்டு
தொட்டேடுத்த பூச்செண்டு !
எடுக்கும்போது இவள்:
குண்டு மில்லி, ரோஜா நிறம்;
பஞ்சு கண்ணம், பிஞ்சு உடல்;
நீண்ட விரல்;
என மகிழ்ச்சியின்
மொத்த குத்தகையானாள்!

ஈன்றவள் இவள் முகம்கண்ட நொடி;
வித்திட்ட நான் இவளை விழித்தபடி;
நல்வாழ்வின் காவியத்தில்
வசந்தத்தின் முதல்படி அடைந்தோம்!

எங்கள் நினைவெல்லாம்
இனி வரும் தருணம் எல்லாம்
இவள் இடும் கட்டளைகள் ஆகும் !
இதை உங்களோடு
பகிர்வதில் என் மகிழ்ச்சி
பன்மடங்கு பெருக வகைசெய்யும்!

என்ன
பெயர்? என்ன பெயர்?
என கேட்பவர்க்கெல்லாம்
"மதிமித்ரா" என்ற பெயர் பதிலாகும்!
"நிலவின் தோழி" என்று பொருளாகும்!
- ஒளிச்சுடர்

Friday, December 18, 2009

முதல் வணக்கம்

முதல் வார்த்தை சொல்லித்தந்த அன்னைக்கும்,
முன்நின்று படிபித்த முனைவர்களுக்கும்,
முகம் அறியா புலவர்களுக்கும்
முத்தமிழ் வளர்த்த அறிஞர்களுக்கும்,
ஆத்திச்சுடி முதல் ஐ-பாட்டி வரை
தன்இளமை மாறா தமிழ் தாய்க்கும்,
இயங்கும் உயிருக்கும், தாங்கும் உடலுக்கும்
ஒளிதரும் கருணை வடிவுக்கும்,
வணக்கம் வணக்கம் வணக்கம்!